
மத்தியக் கிழக்கின் முதல் எண்ணெய் வயல் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரானில் கண்டுபிடிக்கப்படுகிறது. இரானின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வரமாக விளங்கிய ஒன்று, இன்று அதன் அழிவுக்கும் காரணமாகிறது.
அழிவது இரான் மட்டுமல்ல. அதன் அண்டை நாடுகளும் சேர்ந்து அவதிக்குள்ளாவதுதான் இதில் உள்ள மாபெரும் அவலம்.
அந்நியப் படையெடுப்பு, ஆட்சிக்கவிழ்ப்புகள், புரட்சிகள், இடைவிடாத போர்கள் என முடிவிலா மாயச் சுழலில் அகப்பட்டுக்கொண்டு, நெடுங்காலமாக அவதிக்குள்ளாகி வரும் இரானின் நீண்ட நெடிய வரலாற்றைப் பேசுகிறது இந்நூல்.











